துப்பாக்கியை வாங்குங்கள்… யாரும் நம்மை அடிமைப்படுத்த முடியாது : பிரேசில் அதிபரின் பேச்சால் சர்ச்சை

Author: Babu Lakshmanan
28 August 2021, 9:49 am
Quick Share

தனது ஆதரவாளர்களை துப்பாக்கி வாங்குமாறு கூறிய பிரேசில் அதிபரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் அதிபராக இருப்பர் ஜெய்ர் போல்சனேரோ. இவர் அதிபர் மாளிகையின் முன்பு திரண்டிருந்த தனது ஆதரவாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, அவர் பேசியதாவது :- விவசாயியாக இருந்தாலும் சரி, விஞ்ஞானியாக இருந்தாலும் சரி, துப்பாக்கி வைத்து இருப்பவர்களை யாராலும் அடிமைப்படுத்த முடியாது.

பீன்ஸ் வாங்குபவர்கள் துப்பாக்கி வாங்க நினைப்பவர்களை சீண்ட வேண்டாம், எனக் கூறினார்.

உலக நாடுகளிடையே துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வரும் நிலையில், பிரேசில் அதிபரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 4570

0

0