சீனத் தடுப்பூசிக்கு அனுமதி..! ரஷ்யாவுக்குத் தடை..! பிரேசில் எடுத்த அதிரடி முடிவு..!
18 January 2021, 1:16 pmபிரேசிலில் அவசரகால பயன்பாட்டிற்காக கொரோனாவுக்கு எதிராக ரஷ்யா உருவாக்கிய ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை அங்கீகரிக்க கோரியதை பிரேசில் தேசிய சுகாதார கண்காணிப்பு நிறுவனம் (அன்விசா) நிராகரித்தது.
அதேசமயம், சீனாவின் சினோவாக் பயோடெக் லிமிடெட் மற்றும் பிரிட்டனின் அஸ்ட்ராஜெனெகா ஆகியவற்றின் கொரோனா தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டிற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ரஷ்யாவின் தடுப்பூசி பிரேசில் சுகாதார அமைப்பின் குறைந்தபட்ச அளவுகோல்களுடன் இணங்கவில்லை என்பதால் ஒப்புதல் தர மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
பிரேசிலில் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் (ஆர்.டி.ஐ.எஃப்) பங்குதாரரான யுனியோ குவிமிகா கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் அன்விசாவை தொடர்பு கொண்டு, பிரேசிலில் ஸ்பூட்னிக் வி தடுப்பூசிக்கான மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை நடத்த அனுமதி கோரியுள்ளது.
இதுபோன்ற விண்ணப்பங்களை மறுஆய்வு செய்த முந்தைய அனுபவத்தை கருத்தில் கொண்டு, 72 மணி நேரத்திற்குள் முடிவை வழங்கியிருக்கலாம் என்று அன்விசா கூறியது. இருப்பினும், பின்னர், தடுப்பூசி குறித்த கூடுதல் தகவல்களை நிறுவனம் கோரியது.
முன்னதாக வெள்ளியன்று, யுனியோ குவிமிகா மற்றும் ரஷ்ய நிதியம் பிரேசிலில் ஸ்பட்னிக் வி’இன் 10 மில்லியன் டோஸை அவசரகால பயன்பாட்டிற்கு கோரியது.
இதற்கிடையே, சீனத் தடுப்பூசி குறித்து பல்வேறு உலக நாடுகள் சந்தேகம் தெரிவித்துள்ள நிலையில், பிரேசில் சீனத் தடுப்பூசிக்கு அனுமதி அளித்துள்ளது பரப்பரப்பைக் கிளப்பியுள்ளது.
0
0