தன்னை தானே திருமணம் செய்து கொண்ட பிரேசில் மாடல் அழகி…!!!

By: Udayaraman
8 September 2021, 9:38 pm
Quick Share

மாடல் அழகி ஒருவர் தன்னை தானே திருமணம் செய்துகொண்ட நிலையில் இந்த திருமணத்திற்கு வருகை தந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வாழ்த்து தெரிவித்த வினோத சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது

பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடலிங் அழகி கிரிஸ் கலேரா, 33 வயதான இவர் மாடலிங் துறையில் அந்நாட்டில் பிரபலமாக இருந்து வருகிறார். இவருக்கு திருமணம் செய்து செட்டில் ஆக வேண்டும் என ஆசை, அதற்கான ஆட்களை தேடினார். சிலருடன் டேட்டிங்கிலும் ஈடுபட்டார் ஆனால் எந்த நபரும் நீண்ட நாளுக்கு நீடிக்கவில்லை, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து சென்றனர்.இதனால் அவருக்கு ஆண்கள் மீதே வெறுப்பு ஏற்பட்டது. தன்னை திருமணம் செய்ய தகுதியான ஆண்கள் யாரும் இல்லை என கருதினார்.

இதனால் அவர் வேறு யாரையும் திருமணம் செய்யாமல் இனி அடுத்தக்கட்ட வாழ்வில் தனியாகவே வாழ முடிவு செய்தார். இதையடுத்து அவர் சர்ச்சில் தன்னைத்தானே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்.இதையடுத்து அவர் பிரேசில் சாவ் பவ்ளவ் பகுதியில் உள்ள சர்ச்சில் திருமண ஏற்பாடுகளை செய்தார். அவர் மணப்பெண் போல அலங்காரம் செய்து தன்னைத்தானே திருமணம்செய்து கொண்டார். இதற்கு அவர் நண்பர்கள் எல்லோரையும் அழைத்திருந்தார். இந்த சம்பவம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Views: - 299

0

0