சீனாவில் கனமழையின் கோர தாண்டவம்: 51 பயணிகளுடன் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பேருந்து…12 பேர் மாயம்..!!

Author: Aarthi Sivakumar
12 October 2021, 10:34 am
Quick Share

பிஜீங்: வடக்கு சீனாவின் ஹீபெய் மாகாணத்தில் பெய்த பலத்த மழையால் சிஜியாஜுவாங் என்ற நகரத்தில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பேருந்து அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு சீனாவின் ஹீபெய் மாகாணத்தில் பெய்த பலத்த மழையால் சிஜியாஜுவாங் என்ற நகரத்தில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

சீனாவில் கன மழை: 51 பயணிகளுடன் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பஸ்

அப்போது, அந்த ஆற்றை பாலத்தில் கடக்க முயன்ற ஒரு பேருந்து ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அதில் இருந்த 51 பயணிகளில் 2 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனா். 37 பேரை மீட்புப் படையினா் மீட்டனா். 12 பேரை காணவில்லை. இதேபோல, அண்டை மாகாணமான சாங்ஷியில் பலத்த மழையால் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன.

அப்பகுதியிலிருந்து 1.20 லட்சம் பேர் மீட்கப்பட்டனா். 1.90 லட்சம் ஹெக்டோ பயிா்கள் மழையால் சேதமடைந்துள்ளன. பிங்யாவோ நகரத்தில் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள சுவா் உள்ளது. மழையால் அதில் 25 மீட்டா் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அரசு செய்தி நிறுவனமான ஜின்ஹுவா தெரிவித்துள்ளது.

Views: - 185

0

0