இலங்கை பிரதமர் தலைமையில் அமைச்சரவை விரிவாக்கம் : மேலும் 8 அமைச்சர்கள் பதவியேற்பு.. காலியாக உள்ள முக்கியத்துறை!!

Author: Udayachandran RadhaKrishnan
23 May 2022, 2:18 pm
Quick Share

இலங்கையில் ஏற்கனவே 13 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய அமைச்சர்கள் மேலும் சிலர் பதவிப்பிரமாணம் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் இந்த பதவிப் பிரமாணம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி விவசாயம், வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சராக மகிந்த அமரவீர பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

அத்துடன், டக்ளஸ் தேவானந்தா கடற்தொழில் அமைச்சராகவும், பந்துல குணவர்தன – வீதி மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சராகவும், கெஹெலிய ரம்புக்வெல்ல – நீர் வழங்கல் துறை அமைச்சராகவும், ரமேஷ் பத்திரன – கைத்தொழில் அமைச்சராகவும், விதுர விக்ரமநாயக்க – புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சராகவும், அஹமட் நசீர் – சுற்றாடல் அமைச்சராகவும், ரொசான் ரணசிங்க – நீர்பாசனம் மற்றும் விளையாட்டு, இளைஞர் விவகார அமைச்சராக நியனம் பெற்றுள்ளனர்.

இதுவரை 21 அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்ட நிலையில், கடும் பொருளாதார சூழலில் இதுவரை யார் நிதியமைச்சர் என்பதும், அந்த பதவிக்கு யாரையும் நியமிக்காமல் உள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 1419

0

0