கம்போடியாவில் வெள்ளப்பெருக்கு: நீரில் மூழ்கிய 2 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள்….!!

By: Aarthi
13 October 2020, 12:32 pm
combodiya flood - updatenews360
Quick Share

கம்போடியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புர்சாட் மாகாணத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் சுமார் 2 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் மற்றும் முக்கிய சாலைகளும் வெள்ளத்தில் மூழ்கின.

ராணுவத்தினரும், போலீசாரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் 2,400க்கும் அதிகமான குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Views: - 41

0

0