டெல்டா வகை கொரோனா பரவல் அச்சம்: இந்திய பயணிகள் விமானங்களுக்கான தடையை நீட்டித்து கனடா அறிவிப்பு..!!

20 July 2021, 9:17 am
Quick Share

ஒட்டாவா: இந்திய பயணிகள் விமானங்களுக்கான தடையை ஆகஸ்டு 21ம் தேதி வரை நீட்டித்து கனடா அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டதும், இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு கனடா அரசு தடை விதித்தது. அதாவது, கடந்த ஏப்ரல் 22ம் தேதி இந்த தடை விதிக்கப்பட்டது.

flight cancel - updatenews360

ஜூலை 21ம் தேதியுடன் இந்த தடை முடிவுக்கு வர இருந்த நிலையில், மேலும் ஒரு மாதம் நீட்டித்து கனடா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, வரும் ஆகஸ்ட் 21ம் தேதி வரை இந்திய பயணிகள் விமானங்களுக்கான கனடாவின் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள கனடா போக்குவரத்து துறை மந்திரி, மருத்துவ நிபுணர்களின் பரிந்துரையின் படியே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், இந்தியாவில் நிலைமை இன்னும் மிக மோசமாகவே உள்ளது. டெல்டா வகை கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் இந்த தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.

Views: - 156

0

0