கேஷியர் இல்லாத சூப்பர் மார்க்கெட்…ஆன்லைனில் Payment: எதிர்கால டெக்னாலஜியை கையிலெடுத்த ‘கேர்போர்’!!

By: Aarthi
7 September 2021, 3:56 pm
Quick Share

துபாய்: துபாய் நகரில் கேஷியர் இல்லாத முற்றிலும் தானியங்கி முறையிலான சூப்பர் மார்க்கெட் திறக்கப்பட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் அமைந்துள்ள துபாய் நகரின் மத்திய கிழக்கு பகுதியில் கேஷியர் இல்லாத முற்றிலும் தானியங்கி முறையில் இயங்கும் ‘கேரி போர்’ சூப்பர் மார்க்கெட் திறக்கப்பட்டுள்ளது. இதில், நொறுக்குத் தீனி, குளிர்பானம் உட்பட அனைத்து பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

கேரிபோர் மொபைல் ஆப் இருப்பவர்கள் மட்டுமே இந்த தானியங்கி சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க முடியும். கடை முழுவதும் ஏராளமான கண்காணிப்பு கேமராக்கள், சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

வாடிக்கையாளர்கள் பொருட்களை எடுத்துக் கொண்டு கடையின் வாயிலுக்கு வந்ததும், அவர்களுடைய மொபைல் போனுக்கு அவர்கள் எடுத்துள்ள பொருட்களுக்கான பில் வந்து விடும். பில் தொகையை டிஜிட்டல் முறையில் செலுத்த வேண்டும்.

எதிர்காலத்தில் இதுபோன்ற கேஷியர், பணியாளர்கள் இல்லாத கடைகள் மக்களின் வரவேற்பை பெறும் என கேரி போர் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஹனிஸ் வெய்ஸ் கூறுகிறார். அமேசான் நிறுவனம் 2018ல் அமெரிக்காவில் இதேபோன்ற ஊழியர்களே இல்லாத தானியங்கி சூப்பர் மார்க்கெட் திறந்தது.

Views: - 284

1

0