நெகிழ்ச்சியை ஏற்படுத்திய குழந்தையின் செயல்..! (வீடியோ)

14 February 2020, 7:27 pm
Child Loves- updatenews360
Quick Share

குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்கள் சொல்லித்தருவது பெற்றோர் கையில் உள்ளது. குழந்தை வளர்ப்பில் நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் பெற்றோர் வளர்ப்பினிலே என்று நம்ம ஊரில் பாடலும் உண்டு.

ஆனால் இந்த வீடியோவில் வரும் குழந்தை செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2 வாரத்திற்கு ஒரு முறை அந்த குழந்தை வசிக்கும் தெருவில் துப்புரவு தொழிலாளர்கள் குப்பைகளை அள்ள வருவதுண்டு. அவர்கள் வருவதை தினமும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் அந்த சிறுவன், துப்புரவு நண்பர்களுக்கு தனது வீட்டில் தயார் செய்த Cookiesஐ கொடுக்கிறார்.

ஒன்றல்ல, அவர்கள் வருவார்கள் என அறிந்து கொண்டு தனது வீட்டில் உள்ள Cookiesஐ கொடுக்கிறார். பிறகு தனது தாய் சொல்லிக் கொடுப்பதை அவர்களுக்கு கூறும் அந்த குழந்தை, தனக்கு பிறந்தநாள் என்றும், வயது 3 என்று மழலை சொல்லில் கொஞ்சுகிறார்.

அந்த குழந்தையை தூக்கி கொஞ்சிய தொழிலாளர், சக தொழிலாளர்களிடம் குழந்தையை தூக்கி காண்பிக்கிறார். பின்னர் அடுத்து முறை உனக்கு பிறந்தநாள் பரிசு வாங்கி வருகிறேன் என கூறிவிட்டு உனக்கு என்ன பிடிக்கும் என கேட்க, அந்த குழந்தை உடனே Paw Patrol என்ற கார்டூனை கூறுகிறார்.

இந்த சிறிய வயதில் மற்றவர்களுக்கு உதவ வேண்டும், மனிதத்தை போற்ற வேண்டும் என குழந்தைக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என அந்த தாய் உணர்த்தியுள்ளதை உணர வேண்டும் என இந்த வீடியோ எடுத்துரைத்துள்ளது.