சானிடைசர் எங்க? இதுல வருமா? அதுல வருமா? சுட்டி குழந்தையின் வைரல் வீடியோ

25 January 2021, 3:37 pm
Quick Share

கொரோனா காலத்தில் சானிடைசர் போட்டு கைகளை சுத்தப்படுத்த பழகிய சுட்டிக்குழந்தை ஒன்று, பார்க்கும் இடத்தில் இருக்கும் அனைத்தையும் சானிடைசர் மிஷினாக நினைத்து அது காட்டும் அட்ராக்ஷன் ஆக்ஷன், பார்ப்பவர்களை சிரிக்க வைக்கிறது.

2020 ஆம் ஆண்டு, கொரோனாவால் பெரும் வீழ்ச்சியை கண்டது. ஆரம்ப காலங்களில் உலகம் முழுவதும், கடுமையான கட்டுப்பாடுகளுடன் விதிக்கப்பட்ட ஊரடங்குகள், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைய, குறைய தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அப்பாடா… கொரோனா பரவல் இல்லை, இனி கொரோனா பரவலை கட்டுப்படுத்திவிடலாம் என நினைத்திருக்கும் சூழலில், உருமாறிய கொரோனா புதிய வடிவில் வேகமாக பரவி வருகின்றன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த, சமூக இடைவெளியை கடைபிடிப்பதுடன், அடிக்கடி சானிடைஷர் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

அவ்வாறு கொரோனா காலத்தில் சானிடைஷர் பயன்படுத்திய குழந்தை ஒன்றின் வீடியோ தான் தற்போது வைரலாக பரவி வருகிறது. திரும்பிய பக்கம் எல்லாம் சானிடைஷர் மிஷின் இருப்பதாக நினைத்துக் கொண்டு, அந்த சுட்டிக்குழந்தை, எலெக்ட்ரிக் பாக்ஸ், தெரு விளக்கு மின்கம்பம் என வரிசையாக சானிடைஷர் பெற்று கைகளை சுத்தம் செய்வது போல் ஆக்சன் காட்டுகிறது. இது பார்ப்பவர்களை சிரிக்க வைக்கிறது.

குழந்தையின் தாய், அதனை வீடியோவாக பதிவு செய்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட, நெட்டிசன்கள் அதனை வைரலாக்கி உள்ளனர். கியூட், கடவுளின் பரிசு, சோ சுவீட்.. என குழந்தைகளை கமெண்ட்ஸ் வழியாக கொஞ்சி வருகின்றனர். குழந்தை என்றால் அழகு தானே.. கொஞ்சாமல் விடமுடியுமா…

Views: - 8

0

0