அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு கட்டுப்பாடுகள் அதிகரிப்பு..! சீனா அதிரடி முடிவு..!

12 September 2020, 6:44 pm
China_America_UpdateNews360
Quick Share

சீனா மற்றும் ஹாங்காங்கில் பணிபுரியும் அமெரிக்க இராஜதந்திரிகளின் நடவடிக்கைகளுக்கு சீனா புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. கடந்த  வருடம் அமெரிக்காவில் சீன இராஜதந்திரிகள் மீது சுமத்தப்பட்ட இதேபோன்ற நடவடிக்கைகளுக்கு பதிலடி நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளது என சீனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்று ஆன்லைனில் வெளியிடப்பட்ட அறிக்கையில், வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், இந்த விதிமுறைகள் மூத்த இராஜதந்திரிகள் மற்றும் சீனாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் உள்ள மற்ற அனைத்து பணியாளர்களுக்கும், சீனா முழுவதும் உள்ள தூதரகங்களுக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.

எனினும், “இரு நாடுகளின் அனைத்து துறைகளுக்கும் இடையிலான சாதாரண பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்பை சீனா ஆதரிப்பதாகவும், கடந்த வருடம் அக்டோபரில் அமெரிக்கா விதித்த நடவடிக்கைகளை ரத்து செய்தால் கட்டுப்பாடுகள் நீக்கப்படலாம் என்றும் சீனத் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

“யு.எஸ். தரப்பு அதன் தவறுகளை உடனடியாக சரிசெய்து, சீன தூதரகம் மற்றும் துணைத் தூதரகங்கள் மற்றும் அவர்களின் ஊழியர்களுக்கு விதிக்கப்பட்ட நியாயமற்ற கட்டுப்பாடுகளை நீக்குமாறு மீண்டும் வலியுறுத்துகிறோம். அமெரிக்க நடவடிக்கைகளுக்கு சீனா பரஸ்பர பதிலடிகளை அளிக்கும்.” என்று செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.

சீனா மற்றும் அமெரிக்கா வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் பல பிரச்சினைகள் குறித்து மோதலில் உள்ளன. ஜூலை மாதம் ஹூஸ்டனில் உள்ள சீன துணைத் தூதரகத்தை மூட அமெரிக்கா உத்தரவிட்ட நிலையில் அதற்கு பதிலளித்த சீனா, தென்மேற்கு நகரமான செங்டூவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை மூட உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 6

0

0