பில்லியன் டாலர் மதிப்புள்ள பிரான்ஸ் அணுசக்தி தொழில்நுட்பத்தைப் பெற சீனா மீண்டும் முயற்சி..!

2 November 2020, 7:10 pm
Xi_Jinping__UpdateNews360
Quick Share

பிரான்சில் இருந்து பில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள முக்கியமான சிவில் அணுசக்தி தொழில்நுட்பத்தைப் பெறுவதற்காக சீனா தனது ராஜதந்திர சேனல் மூலம் தீவிர பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதை அடைவதற்கு, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரனை சீனாவுக்கு அழைத்து ஒப்பந்தத்தை கைப்பற்ற அரசியல் இராஜதந்திரத்தில் சீனா ஈடுபடத் தொடங்கியுள்ளது.

முன்னதாக 2018’ஆம் ஆண்டில், பிரெஞ்சு அரசாங்கத்திற்கு சொந்தமான அணுசக்தி நிறுவனமான ஆரானோ மற்றும் சீனா தேசிய அணுசக்தி கழகம் (சிஎன்என்சி) இடையே ஒரு ஆரம்ப ஒப்பந்தம் கையெழுத்தானது.

இருப்பினும், இந்த ஒப்பந்தம் 2018’ஆம் ஆண்டின் இறுதியில் காலாவதியானது மற்றும் பாதுகாப்பு சம்பந்தமான பிரச்சினைகள் எழுந்ததால் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில் ஆரானோவிற்கும் சி.என்.என்.சிக்கும் இடையிலான 10 பில்லியன் யூரோ மதிப்பிலான ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பிக்க சீனா இப்போது முயன்று வருகிறது. இது இரண்டு நிறுவனங்களால் சீனாவில் அணுசக்தியின் மறு செயலாக்கம் மற்றும் மறுசுழற்சி தொழில்நுட்பத்தை கட்டியெழுப்பும்.

சி.என்.என்.சி என்பது சீன அரசுக்கு சொந்தமான அமைப்பாகும். இது நாட்டின் சிவில் அணுசக்தி திட்டங்களை மட்டுமல்லாது, அதன் இராணுவ அணுசக்தி திட்டங்களையும் மேற்பார்வையிடுகிறது. இது ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பிரெஞ்சு தொழில்நுட்பத்தை கைப்பற்ற தீவிரமாக முயன்று வருகிறது.

தற்போது உலகளவில் உருவாகியுள்ள சீன எதிர்ப்பு பிரச்சாரத்தில் பிரான்ஸ் முன்னிலை வகிக்கும் நிலையில், இந்த ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பிக்க நினைப்பது பாதுகாப்பு வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Views: - 18

0

0

1 thought on “பில்லியன் டாலர் மதிப்புள்ள பிரான்ஸ் அணுசக்தி தொழில்நுட்பத்தைப் பெற சீனா மீண்டும் முயற்சி..!

Comments are closed.