காபூல் விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு தாக்குதல்: சீனா கடும் கண்டனம்..!!

Author: Aarthi Sivakumar
27 August 2021, 4:09 pm
Quick Share

பெய்ஜிங்: காபூல் விமான நிலையத்தில நிகழ்ந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு சீனா கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையம் அருகே நேற்று நடந்த இரு மனித வெடிகுண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 12 அமெரிக்க ராணுவத்தினர் உள்ளிட்ட 108 பேர் கொல்லப்பட்டனர். 143 பேர் படுகாயமடைந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

இந்த கொடூர தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன. இந்நிலையில், சீனாவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில் மேலும் கூறுகையில், காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது. ஆப்கானிஸ்தானில் மாற்றம் எந்த சலசலப்பும் இன்றி நிகழ்வதை அனைத்து தரப்பும் உறுதி செய்ய வேண்டும். காபூல் தாக்குதலில் சீன நாட்டவர்கள் யாரும் பாதிப்பு அடைந்ததாக இதுவரை எந்தத் தகவலும் இல்லை என்றார்.

Views: - 373

0

0