இந்திய தயாரிப்பு ஆப்டிகல் பைபர் கேபிள்களுக்கு இறக்குமதி கட்டணம்..! சீனா பதிலடி நடவடிக்கை..?

13 August 2020, 3:50 pm
India_China_Flag_UpdateNews360
Quick Share

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆப்டிகல் ஃபைபர் கேபிள் மீது சீனா, இறக்குமதி கட்டணத்தை நீட்டித்துள்ளது என்று வர்த்தக அமைச்சகம், இன்று தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது. இந்த கட்டணங்கள் நாளை முதல் புதுப்பிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பில், விசாரணை முடிவுகளின் இறுதி மதிப்பாய்வின் அடிப்படையில் ஆகஸ்ட் 14 முதல் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்ட ஒற்றை முறை ஆப்டிகல் பைபர் கேபிள்களுக்கு தொடர்ந்து இறக்குமதிக் கட்டணங்களை விதிக்க சீன அரசின் வர்த்தக அமைச்சகம் முடிவு செய்தது. இது அடுத்த 5 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும்.” எனத் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பில் பல இந்திய நிறுவனங்கள் பெயரிடப்பட்டுள்ளன. ஒற்றை பயன் கொண்ட பைபர்கள், ஒரு குறிப்பிட்ட அலைநீள வரம்பிற்குள் ஒற்றை முறை ஆப்டிகல் சமிக்ஞையை மட்டுமே கடத்தும் ஒரு இழை என அமைச்சகம் வரையறுத்தது.

ஒற்றை முறை ஆப்டிகல் ஃபைபர் மீதான கட்டணம் ஆகஸ்ட் 14 முதல் நடைமுறைக்கு வந்து ஐந்து ஆண்டுகள் நீடிக்கும். குறிப்பிட்ட இந்திய உற்பத்தியாளர்களைப் பொறுத்து 7.4 சதவீதம் முதல் 30.6 சதவீதம் வரை சுங்கவரி இருக்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கிழக்கு லடாக்கில் உள்ள எல்லையில் நடந்து வரும் சீன-இந்திய எல்லைப் பதற்றம் மற்றும் இருதரப்பு பொருளாதார உறவுகள் மோசமடைந்ததன் பின்னணியில், கட்டணங்களின் நீட்டிப்பு வருகிறது.

“ஆகஸ்ட் 13, 2019 அன்று உள்நாட்டு ஒற்றை முறை ஆப்டிகல் ஃபைபர் தொழிற்துறையின் வேண்டுகோளின் பேரில், இறக்குமதிக் கட்டணங்கள் நிறுத்தப்பட்டால், சீனத் தொழில்களுக்கு ஏற்படக்கூடிய சேதத்தை வர்த்தக அமைச்சகம் மதிப்பீடு செய்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று சீன அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வர்த்தக அமைச்சகம் 2014 ஆகஸ்டில் இந்தியாவில் இருந்து ஒற்றை முறை ஆப்டிகல் பைபர்களை இறக்குமதி செய்வது தொடர்பான எதிர்ப்பு நடவடிக்கைகளை முதன்முறையாக செயல்படுத்தத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

சீனா, மலேசியா மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் அல்லது ஏற்றுமதி செய்யப்படும் தூள் வடிவ கறுப்பு டோனரை இறக்குமதி செய்வதற்கு தற்காலிக இறக்குமதிக் கட்டணத்தை, இந்தியா விதித்த மூன்று நாட்களுக்குப் பிறகு சீன ஆணை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 0 View

0

0