ஜோ பிடென் மற்றும் கமலா ஹாரிஸுக்கு வாழ்த்துக்கள்..! இறுதியாக இறங்கி வந்தது சீனா..!

13 November 2020, 6:22 pm
Biden_Harris_UpdateNews360
Quick Share

சீனா, அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடென் மற்றும் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ் ஆகியோரை வாழ்த்தியுள்ளது. மேலும் அமெரிக்க மக்களின் தேர்வை சீனா மதிக்கிறது என்று மேலும் தெரிவித்துள்ளது.

“அமெரிக்கத் தேர்தல்கள் குறித்து சர்வதேச நடத்தை விதிகளை பின்பற்றி வருகிறோம்” என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸும் ஜோ பிடெனுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

“அமெரிக்க மக்களின் தேர்வை நாங்கள் மதிக்கிறோம், ஜோ பிடென் மற்றும் கமலா ஹாரிஸுக்கு நாங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்களின் முடிவு அமெரிக்க சட்டங்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி தீர்மானிக்கப்படும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்” என்று வாங் கூறினார்.

குடியரசுக் கட்சியின் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தேர்தல் முடிவுகளை ஒப்புக் கொள்ள மறுத்ததைத் தொடர்ந்து, சீனா ஆரம்பத்தில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பிடனை வாழ்த்த தயங்கியது.

நவம்பர் 9’ம் தேதி, பிடெனின் வெற்றியை வாழ்த்த வாங் மறுத்துவிட்டார். அமெரிக்க தேர்தலின் முடிவு நாட்டின் சட்டங்கள் மற்றும் நடைமுறைகளால் தீர்மானிக்கப்பட வேண்டும் என்று அப்போது கூறியது குறிப்பிடத்தக்கது.

Views: - 18

0

0

1 thought on “ஜோ பிடென் மற்றும் கமலா ஹாரிஸுக்கு வாழ்த்துக்கள்..! இறுதியாக இறங்கி வந்தது சீனா..!

Comments are closed.