சீனா கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்ட நாடு அல்ல…சீனாவின் புதிய விளக்கம்..!!

10 October 2020, 1:28 pm
China-Coronavirus - updatenews360
Quick Share

பீஜிங்: கொரோனா வைரஸ் பல நாடுகளில் பரவி இருந்ததாகவும், சீனா அதைக் கண்டறிந்த முதல் நாடு என புதிய விளக்கத்தை சீனா அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் மனிதர்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் உகான் நகரில் கொரோனா வைரஸ் முதன்முதலாக கண்டறியப்பட்டது.

சீன தான் கொரோனா வைரஸை பரப்பியது என அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. ஆனால் தொடர்ந்து சீனா அரசு அதனை மறுத்து வருகிறது. இந்த நிலையில் சீனா கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்ட நாடு அல்ல என கூறியுள்ளது. பல நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி இருந்ததாகவும், அதனை கண்டறிந்த முதல் நாடு தான் சீனா என்றும் புதிய விளக்கத்தை அளித்துள்ளது.

சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங், கொரோனா வைரஸ் புதிய வகை வைரஸ் என்றும் அது தொடர்பான பல உண்மைகள் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் கூறினார்.

சீனாவின் கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை மறைத்து வைத்திருப்பதாக அவர் குற்றம் சாட்டிய அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவின் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக சீனாவின் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Views: - 57

0

0