தீவிரவாதத்தை எதிர்க்க தன்னையே தியாகம் செய்த பாகிஸ்தான்..! சீனா கருத்து..!
11 September 2020, 6:46 pmசீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் பாகிஸ்தான் பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்று தெரிவித்தார். தனது அனைத்து கால நட்பு நாடான பாகிஸ்தானை ஆதரிக்க விரைந்து வந்த சீனா, உலக சமூகம் அதை அங்கீகரித்து மதிக்க வேண்டியது அவசியம் என்று கூறினார்.
இந்திய அமெரிக்க கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு செயற்குழு, பாகிஸ்தான் தனது பிரதேசத்தை பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய உடனடி மற்றும் நீடித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டியது.
“பாகிஸ்தான் தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள எந்தவொரு பிரதேசமும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்தவும், 26/11 மும்பை தாக்குதல் மற்றும் பதான்கோட் உட்பட இத்தகைய தாக்குதல்களில் ஈடுபடுவோருக்கு விரைவாக தண்டனை வழங்கவும் பாகிஸ்தான் உடனடி, நீடித்த மற்றும் மாற்ற முடியாத நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசர தேவையை இரு தரப்பினரும் அடிக்கோடிட்டுக் காட்டினர்.” என அறிக்கை தெரிவித்தது.
பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான செயல்முறையில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட இந்திய அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு செயற்குழுவின் 17’வது கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில் இந்திய அமெரிக்க செயற்குழுவின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீன தனது நட்பு நாடான பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்துள்ளது.
“பயங்கரவாதம் என்பது அனைத்து நாடுகளும் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான சவால். பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் பாகிஸ்தான் பெரும் முயற்சிகளையும் தியாகங்களையும் செய்துள்ளது. சர்வதேச சமூகம் அதை அங்கீகரித்து மதிக்க வேண்டும். சீனா அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் எதிர்க்கிறது” என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறினார்.
0
0