சுதந்திரம் என்றால் போர் தான்..! தைவானை வெளிப்படையாக மிரட்டிய சீனா..!

29 January 2021, 3:36 pm
Taiwan_flag_UpdateNews360
Quick Share

இந்திய எல்லையில் அத்து மீறினால், அடி பலமாக விழுவதால், சீனா தற்போது தைவானை நோக்கி தனது அத்துமீறலை கடுமையாக்கி வருகிறது. அண்மையில் தைவான் அருகே இராணுவ நடவடிக்கைகளை முடுக்கிவிட்ட பின்னர் “சுதந்திரம் என்றால் போர்” என்றும் அதன் ஆயுதப் படைகள் ஆத்திரமூட்டல் மற்றும் வெளிநாட்டு தலையீட்டிற்கு பதிலளிக்கும் வகையில் கடுமையாக செயல்படும் எனவும் எச்சரித்தது.

சீனா தனது சொந்த பிரதேசமாக உரிமை கோரிய தைவான், கடந்த வார இறுதியில் பல சீன போர் விமானங்கள் மற்றும் குண்டுவீசும் விமானங்களை அதன் தென்மேற்கு வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்திற்குள் நுழைந்ததாக அறிவித்தது. இதையடுத்து தைவானுக்கு அழுத்தம் கொடுப்பதை நிறுத்துமாறு சீனாவை அமெரிக்கா கடுமையாக கண்டித்தது.

தைவானின் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் தைவானை முறையான சுதந்திர நாடாக அறிவிப்பதை நோக்கி நகர்த்துவதாக சீனா நம்புகிறது. இருப்பினும் தைவான் ஜனாதிபதி சாய் இங்-வென் பலமுறை, இது ஏற்கனவே சீன குடியரசு என்று அழைக்கப்படும் ஒரு சுதந்திர நாடு எனக் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

விமானப்படையின் சமீபத்திய நடவடிக்கைகள் குறித்து மாதாந்திர செய்தி மாநாட்டில் கேட்டதற்கு, சீன பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வு கியான், தைவான் சீனாவின் பிரிக்க முடியாத பகுதி என்று கூறினார்.

“தைவான் ஜலசந்தியில் சீன மக்கள் விடுதலை இராணுவம் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகள் தைவான் ஜலசந்தியின் தற்போதைய பாதுகாப்பு நிலைமையை நிவர்த்தி செய்வதற்கும் தேசிய இறையாண்மையையும் பாதுகாப்பையும் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள்” என்று அவர் கூறினார்.

“அவை தைவான் சுதந்திர படைகளின் வெளிப்புற குறுக்கீடு மற்றும் ஆத்திரமூட்டல்களுக்கு ஒரு முழுமையான பதில்” என்று அவர் மேலும் கூறினார்.

தைவானில் ஒரு சில மக்கள் மட்டுமே சுதந்திரத்தை நாடுகிறார்கள் என்று வு கியான் மேலும் கூறினார்.

“அந்த தைவான் சுதந்திரம் கோரும் நபர்களை நாங்கள் எச்சரிக்கிறோம்: நெருப்புடன் விளையாடுபவர்கள் தங்களை எரிப்பார்கள். தைவான் சுதந்திரம் என்றால் போர் என்று பொருள்.” என்று அவர் மேலும் கூறினார்.

தைவானை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு சீனா ஒருபோதும் சக்தியைப் பயன்படுத்துவதை கைவிடவில்லை என்றாலும், சீனா இதுபோன்ற வெளிப்படையான, வாய்மொழி மோதல்களை உருவாக்குவது வழக்கத்திற்கு மாறானது.

தைவானின் மெயின்லேண்ட் விவகாரங்கள் கவுன்சில், சீனா தனது இறையாண்மையைக் காத்து சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் நிலைநிறுத்துவதற்கான தைவானின் தீர்மானத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது என்று கவனமாக சிந்திக்க வேண்டும் என்றார்.

முன்னதாக இந்திய எல்லையில் முட்டி மோதிய சீனா, இந்திய எதிர்ப்பை சம்லாலிக்க முடியாமல் பின்வாங்கியது சீனர்களிடையே ராணுவம் மீதான இமேஜை குறைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 
இதனால் இமேஜை தக்கவைக்க, தற்போது தைவான் மீது அழுத்தத்தை அதிகரித்து வருவதாக பாதுகாப்பு வல்லுநர்கள் கருதுகின்றனர்.

Views: - 0

0

0

1 thought on “சுதந்திரம் என்றால் போர் தான்..! தைவானை வெளிப்படையாக மிரட்டிய சீனா..!

Comments are closed.