தெற்காசிய நாடுகளுடன் தொடர்பு கொள்ள இப்படியொரு திட்டமா..? சீனாவின் திபெத் பிளான் வெளியானது..!

6 March 2021, 8:16 pm
china_flag_updatenews360
Quick Share

இந்த ஆண்டு முதல் தொடங்கவிருக்கும் 14’வது ஐந்தாண்டு திட்டத்தில் திபெத்தை தெற்காசியாவுடன் இணைக்கும் ஒரு முக்கியமான பாதையை அமைப்பதற்கான திட்டத்தை செயல்படுத்த சீனா முடிவு செய்துள்ளது என்று அந்நாட்டின் அதிகாரப்பூர்வ ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

தெற்காசியாவிற்கான பாதை அமைப்பதில் சீனா திபெத்தை ஆதரிக்கும் என்று சீனாவின் பாராளுமன்றமான தேசிய மக்கள் காங்கிரசுக்கு சமர்ப்பிக்கப்பட்ட 14’வது திட்ட ஆவணத்தை மேற்கோள் காட்டி அரசு நடத்தும் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தேசிய மக்கள் காங்கிரசின் வருடாந்திர அமர்வு நேற்று பெய்ஜிங்கில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

தேசிய பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுக்கான 14 வது ஐந்தாண்டு திட்டத்தின் (2021-2025) வரைவு மற்றும் 2035’ஆம் ஆண்டு வரையிலான நீண்ட தூர நோக்கங்கள், ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி மூலம் முறையான ஒப்புதலுக்கு தேசிய பாராளுமனறத்தில் சமர்ப்பிக்கபப்ட்டுள்ளது.

சின்ஹுவா அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை என்றாலும், திபெத் மற்றும் நேபாளம் வழியாக டிரான்ஸ்-இமயமலை பல பரிமாண இணைப்பு நெட்வொர்க்கை உருவாக்க சீனா நீண்ட காலமாக திட்டமிட்டுள்ளது.

இது சீனாவிற்கும் நேபாளத்திற்கும் இடையிலான பெல்ட் மற்றும் சாலை முயற்சி ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக கருதப்பட்டது.

நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நேபாளம் சீனாவுடன் நெருக்கமாகிவிட்டது. குறிப்பாக டிரான்ஸ்-இமயமலை இணைப்பு நெட்வொர்க்கை உறுதிப்படுத்துகிறது.

2019’ஆம் ஆண்டில், சீனாவும் நேபாளமும் தங்களது 2016 போக்குவரத்து ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கான ஒரு நெறிமுறையில் கையெழுத்திட்டன. இது சீன துறைமுகங்களை நேபாளத்தின் வெளிநாட்டு வர்த்தகத்திற்கு பயன்படுத்த அணுகலை வழங்கியது. மேலும் இந்திய துறைமுகங்களை சார்ந்திருப்பதைக் குறைத்தது.

சாலை நெட்வொர்க்கைத் தவிர, திபெத்திலிருந்து நேபாளத்திற்கு ரயில் நெட்வொர்க்கையும் விரிவுபடுத்துவது குறித்து இரு நாடுகளும் ஆலோசித்து வருகின்றன.

கடந்த ஆண்டு, திபெத் மற்றும் நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவை இணைக்கும் எல்லை தாண்டிய இரயில்வேக்கு ஆயத்த பணிகள் நடந்து வருவதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், கிழக்கு நேபாளத்தின் ஜாபாவில் உள்ள சீனா-நேபாள நட்பு தொழில்துறை பூங்காவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பணிகள் தொடங்கப்படும். சீன முதலீட்டில் நேபாளத்தில் தொடங்கப்பட்ட முதல் பூங்கா இதுவாகும்.

இந்த இரண்டு திட்டங்களும் டிரான்ஸ்-இமயமலை பல பரிமாண இணைப்பு நெட்வொர்க்கின் ஒரு பகுதியாகும் என்று அறிக்கை தெரிவித்துள்ளது.

Views: - 1

0

0