நிலவு குறித்த ஆராய்ச்சி: 6வது விண்கலத்தை செலுத்துகிறது சீனா…!!

17 November 2020, 5:24 pm
mission - updatenews360
Quick Share

நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக 6வது விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான இறுதிக்கட்ட பணியில் சீனா ஈடுபட்டுள்ளது.

நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக சீனா ஏற்கனவே 5 விண்கலங்களை விண்ணில் செலுத்தியுள்ளது. 1969ம் ஆண்டு சந்திரனுக்கு முதன்முதலாக அமெரிக்கா மனிதர்களை அனுப்பி சாதனை படைத்தது. அதை தொடர்ந்து, இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் சந்திரனில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நிலவு மற்றும் செவ்வாய் போன்ற பகுதிகளுக்கு மனிதனை அனுப்பி சோதனைகளில் ஈடுபடுவதற்கு முன்னர் தாவரங்கள் மற்றும் பிற உயிரினங்களை அனுப்பி அவை எப்படி அங்குள்ள சூழ்நிலைகளை சமாளித்து தாக்குபிடிக்கின்றன என்பதையும், அவற்றுக்கு எந்தவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன என கண்டறிந்து ஆவணப்படுத்துவதை நோக்கமாக கொண்டு, சீனாவின் ‘சாங் இ’ எனும் விண்வெளி திட்டம் செயல்படுகிறது.

இந்நிலையில், தற்போது 6வது முறையாக ‘சாங்-இ 5’ என்னும் விண்கலத்தை லாங் மார்ச்-5 ராக்கெட் மூலம் இந்த மாத இறுதியில் செலுத்த சீனா திட்டமிட்டுள்ளது. இந்த ராக்கெட்டை ஹைனான் மாகாணத்திலுள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் விண்ணில் செலுத்துவதற்காக சீனா இன்று வெற்றிகரமாக நிறுத்தியது.

Views: - 23

0

0