சீனாவின் அடுத்த குறி பாமீர் குன்றுகள்..? இந்தியாவிடம் மூக்குடைந்த சீனா தஜிகிஸ்தானிடம் மோத முடிவு..!

7 August 2020, 8:02 pm
tajikistan_pamir_mountains_updatenews360
Quick Share

சீனா தனது பிராந்திய உரிமைகோரல்களை விரிவுபடுத்தும் இடைவிடாத நடவடிக்கையின் ஒரு பகுதியாக தற்போது தஜிகிஸ்தானின் பாமீர் மலைகளை ஆக்கிரமிக்க முயல்வது அம்பலமாகியுள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த நடவடிக்கையால் மத்திய ஆசியக் குடியரசான தஜிகிஸ்தான் கடும் அதிருப்தியில் உள்ளது.

இந்த முஸ்லீம் பெரும்பான்மை நாட்டின் 90 சதவீதத்திற்கும் அதிகமான நிலப்பரப்பு மலைப்பாங்கானது.

கம்யூனிஸ்ட் கட்சியின் முன் அனுமதியின்றி எதையும் வெளியிடாத அரசு கட்டுப்பாட்டில் உள்ள சீன ஊடகங்களில் சமீபத்திய கட்டுரைகள், ஆப்கானிஸ்தான் மற்றும் சீனாவுடன் தாஜிக் எல்லையில் இயங்கும் தஜிகிஸ்தானின் பாமீர் மலைத்தொடரை சீனாவிடம் ஒப்படைக்க அழைப்பு விடுத்துள்ளன.

இது தொடர்பாக சீன தேசியவாத வரலாற்றாசிரியரின் ஒரு கட்டுரையில், அவர் முழு பாமிர் பிராந்தியமும் சீனாவைச் சேர்ந்தவை என்றும், அவற்றை தஜிகிஸ்தான் சீனாவிடம் திருப்பித் தர வேண்டும் என்றும் அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மேற்கோள் காட்டி கூறியுள்ளார்.

2011’ல் இரு நாடுகளும் ஒரு எல்லை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போதிலும் சீனாவிலிருந்து வந்துள்ள இந்த கருத்து தெளிவாக, ஜி ஜின்பிங் ஆட்சியின் நோக்கத்தை தஜிகிஸ்தானுக்கு தெளிவாக உணர்த்தியுள்ளதாக பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

முந்தைய சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்த, தஜிகிஸ்தான் 1991’இல் சுதந்திரமானது. ஆனால் அடுத்த ஆண்டு அது ஒரு உள்நாட்டு யுத்தத்தைக் கண்டது. அந்த உள்நாட்டு யுத்தம் ஐந்து ஆண்டுகள் நீடித்தது. அப்போதிருந்து நாடு சர்வாதிகார ஜனாதிபதி எமோமாலி ரஹ்மனால் இரும்பு பிடியால் ஆளப்பட்டது.

சோவியத் கடந்த காலத்தின் காரணமாக, தஜிகிஸ்தான் ரஷ்ய செல்வாக்குக்கு உட்பட்டே இருந்தது. ஆனால் கடந்த இரண்டு தசாப்தங்களில், ரஷ்யாவை விட மிக ஆழமாக தஜிகிஸ்தானில் சீனா தன்னுடைய இருப்பை பலப்படுத்தியுள்ளது. தஜிகிஸ்தான் உட்பட 10’க்கும் மேற்பட்ட நாடுகளுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் சீனா, மத்திய ஆசியாவில் முதலீடுகளை அதிகரித்துள்ளது.

2011’ஆம் ஆண்டில், தஜிகிஸ்தான் பாராளுமன்றம், பாமீர் மலைகளில் 1,000 சதுர கி.மீ நிலத்தை சீனாவிடம் கடனுக்கு ஈடாக ஒப்படைப்பதற்கான முந்தைய ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது.

அந்த நேரத்தில், சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் “சர்வதேச சட்டத்தின் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகளின்படி சம ஆலோசனைகள் மூலம் இந்த விவகாரம் தீர்க்கப்பட்டது” என்றார்.

சீனா எவ்வளவு கடன் கொடுக்க முடிவு செய்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் கடனுக்கான நிலம் உலகின் பல பகுதிகளிலும் சீனாவின் விரிவாக்க தந்திரோபாயங்களின் ஒருங்கிணைந்த பகுதியாகும். அவற்றில் சில சீனாவின் எல்லைகளிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடனுக்கான நில பரிமாற்றத்திற்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, தஜிகிஸ்தான் தொடர்ந்து கடனில் மூழ்கியுள்ளது. இதையடுத்து சீனாவை ஒரு இராணுவ தளத்தை கட்டமைக்க அனுமதித்தது.

எனினும், தஜிகிஸ்தான் அரசாங்கம் பாமீர் குன்றுகளைப் பற்றி மிகவும் எச்சரிக்கையாகவே உள்ளது. கடந்த மாதம், சீன வரலாற்றாசிரியரின் கட்டுரை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, தஜிகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம், சீனத் தூதரை அழைத்து புகார் செய்துள்ளது.

சீனா அதன் பிற மத்திய ஆசிய அண்டை நாடுகளான கஜகஸ்தான் மற்றும் கிர்கிஸ்தானுடனும் இதே போன்ற கொள்கைகளையே பின்பற்றி வருகிறது. ஆனால் ஜி ஜின்பிங்கின் கீழ், சீனாவின் “ஓநாய் போர்வீரன்” இராஜதந்திரம் அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தல் நிலையில் வைத்துள்ளது.

இந்தியா மற்றும் ஜப்பான் முதல் தைவான் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நாடுகள் வரை, சீனா தனது கொடுமைப்படுத்துதல் தந்திரோபாயங்கள் மற்றும் போர்க்குணமிக்க நடத்தை மூலம் தனது நண்பர்களின் பட்டியலில் சேர்க்கவில்லை.

தஜிகிஸ்தான் சீனாவுடன் எதிர்த்து நிற்க மிகவும் பலவீனமாக இருக்கலாம். ஆனால் சீனாவின் நடவடிக்கைகளால் சோர்வடைந்த நாடுகளுடன் கூட்டணியமைத்து சீனாவை பின்னுக்குத் தள்ளத் தொடங்கலாம்.

Views: - 1

0

0