சீன கேமிங் நிறுவனத் தலைவர் விஷம் வைத்துக் கொலை..! பரபர பின்னணி..!

28 December 2020, 4:42 pm
Yoozoo_Games_China_UpdateNews360
Quick Share

39 வயதே ஆன சீன கேமிங் கோடீஸ்வரர் லின் குய் ஷாங்காயில் உள்ள ஒரு மருத்துவமனையில், விஷம் குடித்து டிசம்பர் 16 அன்று அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

2009’ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட சீன விளையாட்டு மேம்பாட்டாளரான யூஜு குழுமத்தின் தலைவராகவும் தலைமை நிர்வாகியாகவும் லின் குய் இருந்தார். வெள்ளிக்கிழமை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் அவரது மறைவு செய்தியை உறுதிப்படுத்தியது. 

“விடைபெறு இளைஞனே, நாங்கள் ஒன்றாக இருப்போம். தொடர்ந்து கருணை காட்டுவோம், நன்மையை தொடர்ந்து நம்புவோம், கெட்ட எல்லாவற்றிற்கும் எதிரான போராட்டத்தைத் தொடருவோம்.” என நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், லின் மரணம் குறித்து ஷாங்காய் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். லின் சிகிச்சையின் போது, ​​அவருக்கு விஷம் வழங்கப்பட்டதாக மருத்துவமனை அதிகாரிகள் போலீசாரிடம் தெரிவித்தனர். இந்த வழக்கின் பிரதான சந்தேக நபரான லினின் சகாவான சூ யாவ் என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். இதையடுத்து அவர் காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.

யூஜு குழுமத்தின் நிர்வாகிகள் மத்தியில் ஏற்பட்ட தகராறால் தான் லின் குய் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளார் என சீன ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. 
இதற்கிடையே விரைவில் லினினுக்குப் பதிலாக புதிய தலைவரை நியமிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

Views: - 24

0

0