இந்தியாவின் கொரோனா பாதிப்பை கேலி செய்து சமூக ஊடக பதிவு..! சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கொடூர முகம் அம்பலம்..!

2 May 2021, 3:53 pm
Xi_Jinping_UpdateNews360
Quick Share

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிசி) ஒரு சக்திவாய்ந்த பிரிவு வெளியிட்டுள்ள ஒரு சமூக ஊடக பதிவில், இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையால் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடியை கேலி செய்திருந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் ஒரு சீன ராக்கெட் ஏவப்பட்டதை ஒரு இந்தியாவில் தகன மேடையில் கொரோனாவால் இறந்தவரின் சடலம் எரிக்கப்படுவதை ஒப்பிட்டு நக்கலடித்துள்ளது. எனினும் சர்ச்சை ஏற்பட்ட பிறகு இந்த பதிவு தற்போது நீக்கப்பட்டு விட்டது.

சிபிசியின் மத்திய குழுவின் அரசியல் மற்றும் சட்ட விவகாரங்களுக்கான ஆணையம் (சிபிஎல்ஏ) நேற்று, சீன சமூக ஊடகமான வெய்போவில் இரண்டு படங்களின் ஒரு படத்தொகுப்பை வெளியிட்டது. இது சீன ராக்கெட் ஏவுதலையும், இந்தியாவில் ஒரு சடலம் எரியூட்டுவதால் ஏற்படும் ஒளியையும் அருகருகே காட்டியது. இதற்கான தலைப்பு இந்தியாவை மிக மோசமாக கேலி செய்யும் வகையில் இருந்தது.

சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் இந்தியாவின் தொற்று நிலைமை குறித்து கவலைப்படுவதாகவும், தனது இரங்கலைத் தெரிவித்ததாகவும் கூறப்பட்ட ஒரு நாள் கழித்து இந்த வெய்போ பதிவு வெளியிடப்பட்டது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கொடூர முகத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

சிபிஎல்ஏ என்பது சிபிசி கட்டமைப்பில் ஒரு சக்திவாய்ந்த உறுப்பு மற்றும் போலீஸ் அதிகாரிகள், வழக்குரைஞர்கள் மற்றும் நீதிமன்றங்களை மேற்பார்வையிடுகிறது.

இது தற்போது சிபிசியின் மத்திய குழுவின் அரசியல் பணியகத்தின் உறுப்பினரான குவோ ஷெங்கூன் தலைமையில் செயல்படுகிறது.

இந்த படத்தொகுப்பை ட்வீட் செய்த லண்டனை தளமாகக் கொண்ட பத்திரிகையாளரும் ஆராய்ச்சியாளருமான மெங்யூ டோங், “இந்தியாவில் சமீபத்திய கொரோனா பாதிப்பை கேலி செய்வது நல்லது என்று நினைக்கும் நபர்கள் உள்ளார்கள்? சி.சி.பி மத்திய அரசியல் மற்றும் சட்ட விவகார ஆணையத்துடன் இணைந்த ஒரு சமூக ஊடக கணக்கு இதை வெய்போவில் வெளியிட்டது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவின் ஆன்லைன் உலகைக் கண்காணிக்கும் சீனா டிஜிட்டல் டைம்ஸ் அறிக்கை: “சீன போலீஸ் ஆன்லைன் மற்றும் தியான்ஜின் நகராட்சி மக்கள் கொள்முதல் போன்ற அதிகாரப்பூர்வ கணக்குகள் தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை கேலி செய்யும் ஒரு படத்தைபல தளங்களில் வெளியிட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளது.

சீன அதிகாரப்பூர்வ ஊடகங்களுக்கும் இந்தியர்களை கேலி செய்த வரலாறு உண்டு.

2017’ஆம் ஆண்டில் சிக்கிம் எல்லைக்கு அருகே டோக்லாம் மோதலின் போது, செய்தி நிறுவனமான சின்ஹுவா, இந்தியர்களை கேலி செய்து இனவெறி கருத்துக்களுடன் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தது.

ஆங்கிலத்தில் உள்ள அந்த வீடியோ மூன்று நிமிடங்களுக்கு மேல் ஓடியது. “7 இந்தியாவின் பாவங்கள்: இந்தியா தனது ஏழு பாவங்களை ஒப்புக்கொள்ள வேண்டிய நேரம் இது” என்ற தலைப்பில் இருந்தது.

இது ஒரு தலைப்பாகை மற்றும் ஒரு போலி தாடியுடன் ஒரு மனிதனைக் கொண்டிருந்தது. ஒரு இந்திய சீக்கிய நபரை கேலி செய்வதற்கான ஒரு வெளிப்படையான முயற்சியாக இது இருந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 157

0

0

Leave a Reply