நாட்டை ஒருபோதும் எதிரிகளிடம் விட்டு கொடுக்க மாட்டோம்: ராணுவ பயிற்சியில் அர்மீனிய பிரதமரின் மனைவி…!!

30 October 2020, 4:05 pm
aarminia - updatenews360
Quick Share

அசர்பைஜானுக்கு இடையிலான மோதல் தொடர்ந்து வரும் நிலையில், ஆர்மீனிய பிரதமரின் மனைவி ராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

ஆர்மீனிய பிரதமர் நிகோல் பாஷின்யானின் மனைவி அன்னா ஹகோபியான் 13 பெண்கள் கொண்ட படைப்பிரிவு ஒன்றுடன் ராணுவ பயிற்சி மேற்கொண்டுள்ளார். மேலும் பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆர்மீனிய ராணுவத்திற்கு உதவும் பொருட்டு எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும், தமது நாட்டை ஒருபோதும் எதிரிகளிடம் விட்டுக் கொடுக்கமாட்டோம் எனவும் பதிவிட்டுள்ளார்.

Views: - 15

0

0