மாரடைப்பால் மரணமடைந்த பெண் கைதிக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றிய ஈரான்..!

24 February 2021, 9:57 pm
Hanged_Death_Updatenews360
Quick Share

கணவனைக் கொன்றதற்காக தூக்கிலிடப்படுவதற்குக் காத்திருந்த ஈரானிய பெண் மாரடைப்பால் இறந்தார். ஆனால் அவரது சடலத்தை தூக்கிலிட்டு தண்டனையை நிறைவேற்றியுள்ளது. 

ஈரான் தலைநகரான தெஹ்ரானுக்கு மேற்கே உள்ள ராஜாய் ஷாஹர் சிறைச்சாலையில் தனது முறைக்கு காத்திருந்தபோது, ​​16 ஆண்கள் அவருக்கு முன்னால் தூக்கிலிடப்பட்டதால், சஹ்ரா இஸ்மாயிலி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலனாய்வு அமைச்சகத்தின் மூத்த அதிகாரியான கணவரை கொலை செய்ததாக அவரின் மனைவியும் இரு குழந்தைகளின் தாயுமான சஹ்ரா குற்றவாளி என்று கூறப்படுகிறது.

ஓமிட் மொராடி எனும் அவரது அவரது வழக்கறிஞர் தனது கணவர் தன்னையும் அவர்களது மகளையும் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படுவதாகவும், சஹ்ரா தற்காப்புக்காக செயல்பட்டதாகவும் கூறினார்.

ஒரு சமூக ஊடக பதிவில் நிகழ்வுகளை விவரிக்கும் மொராடி, இஸ்மாயிலியின் இறப்பு சான்றிதழ் மாரடைப்பு தான் அவரது மரணத்திற்குக் காரணம் என்று கூறுகிறது. ஏனெனில் அவரது கண்களுக்கு முன்பாக 16 ஆண்கள் தூக்கிலிடப்பட்டனர்.

சஹ்ராவின் இதயம் இதனால் பயத்தில் நின்றுவிட்டது. அவர் தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பு அவர் இறந்துவிட்டார் என்று மொராடி எழுதினார்.

Views: - 1

1

0