கொரோனாவின் 2வது அலை..! நியூசிலாந்தில் 12 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு

14 August 2020, 7:38 pm
Quick Share

வெலிங்டன்: கொரோனாவின் 2வது அலை காரணமாக, நியூசிலாந்தில் 12 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

உலகில் 215 நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று கால் பதித்துள்ளது. அமெரிக்கா, பிரேசில், இந்தியா ஆகிய நாடுகளில் இதன் தாக்கம் மிக அதிகம். இந்நாடுகளில் கொரோனா பலி எண்ணிக்கையும் உச்சத்தில் தான் இருக்கிறது.

பாதிப்பு குறைவான நாடுகளில் ஒன்றான நியூசிலாந்தில், மார்ச் இறுதியில்  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆகையால், கொரோனா பாதிப்பு குறைய, பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் நியூசி.  கொரோனா பாதிப்பில் இருந்து நாடு மீண்டுவிட்டது என்று அறிவித்தார்.

ஆனால் 102 நாட்களுக்கு பின் ஆக்லாந்தில் மீண்டும் தொற்று கண்டறியப்பட்டது.  பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, உரிய மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு விட்டனர்.

முன் எச்சரிக்கையாக ஆக்லாந்தில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டது. அவசியம் இன்றி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நியூசிலாந்தில் இன்று 12 புதிய பாதிப்புகள் பதிவாகி உள்ளன. இதுகுறித்து ஆர்டன் கூறியதாவது: வைரசானது எங்கிருந்து வந்தது என்பது பற்றி தெளிவாக தெரியவரவில்லை. 

பாதிக்கப்பட்ட 29 பேரும் ஆக்லாந்தில் இருந்து தொற்றுக்கு ஆளானவர்கள் என தெரிய வந்துள்ளது. ஆக்லாந்து மைய புள்ளியாகும். ஆகையால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் 12 நாட்கள் நீட்டிக்கப்படுகிறது என்றார். 

Views: - 10

0

0