சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரம்…! தொற்றுகள் அதிகமாவதால் அதிர்ச்சி

2 August 2020, 2:26 pm
China_UpdateNews360
Quick Share

பெய்ஜிங்: சீனாவில் 2வது கொரோனா அலையாக, 24 மணிநேரத்தில் 49 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

உலகில் 200க்கும் அதிகமான நாடுகளை கதி கலங்க வைத்திருப்பது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் முதன் முதலில் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்டது. அங்குள்ள மீன் சந்தையில் இருந்து 100க்கும் மேற்பட்டோருக்கு பரவியது.

கடந்த டிசம்பரில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதும் உஷாரான சீனா பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த அதிரடி நடவடிக்கைகளினால் அந்நாட்டில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டது.

ஏப்ரல் மாத இறுதியில், உகான் நகரில் இருந்த கடைசி கொரோனா நோயாளியும் குணம் அடைந்து விட்டதாக சீனா அறிவித்தது. இயல்பு வாழ்க்கை ஆரம்பித்துவிட்டது என்றும் அறிவித்தது.

ஆனால் இப்போது நிலைமை வேறாக மாறி வருகிறது. அங்கு கடந்த 24 மணிநேரத்தில் 49 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி 14 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து 14 பேர் குணமடைந்துள்ளனர்.

புதிதாக தொற்று கண்டறியப்பட்ட 49 நபர்களில் 33 பேர் உள்ளூர்வாசிகள், 16 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  சின்ஜியாங் மாகாணத்தில் அதிகபட்சமாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

சீனாவில் இதுவரை 54,385 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 4,634 நபர்கள் கொரோனாவால் உயிரிழந்தனர். 79,003 பேர் குணமடைந்து உள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்து இருக்கிறது.

Views: - 0

0

0