ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் டோக்கியோவில் அதிர்ச்சி: ஒரே நாளில் 2,848 பேருக்கு கொரோனா உறுதி…!!

Author: Aarthi
27 July 2021, 4:25 pm
Quick Share

டோக்கியோ: ஒலிம்பிக் போட்டியில் நடைபெற்று வரும் டோக்கியோ நகரில் 2848 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா காலகட்டத்தில் முக்கிய விளையாட்டு நிகழ்வான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. டோக்கியோ நகரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அங்கு அவசரகால நிலைமை அமல்படுத்தப்பட்டு உள்ளது. டோக்கியோ நகரில் இன்று ஒரே நாளில் 2,848 புதிய கொரோனா நோய்த்தொற்று பாதிப்புகளைப் பதிவுசெய்துள்ளது.

தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஜப்பானிய தலைநகரில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு அதிக எண்ணிக்கையில் பதிவாகி உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நகரில் உள்ள மொத்தம் உள்ள 12,635 கொரோனா நோயாளிகளில் 20.8 சதவீதம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டி சம்பந்தப்பட்டவர்கள் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களில் 4 பேர் விளையாட்டு வீரர்கள் மற்றும் அவர்களில் 2 பேர் ஒலிம்பிக் கிராமத்தில் தங்கியுள்ளனர், இது நகரத்தின் பாதுகாப்பான இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

ஒலிம்பிக் போட்டிகளுக்காக சரியான தடை விதிகள் இருந்தபோதிலும், விளையாட்டு வீரர்கள் மற்றும் பிறர் சம்பந்தப்பட்ட 155 பாதிப்புகள் பதிவாகி உள்ளன.

Views: - 263

0

0