உலகளவில் 18 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு: 39 லட்சம் பேர் உயிரிழப்பு..!!

Author: Aarthi Sivakumar
24 June 2021, 10:27 am
maharashtra__corona_cases_updatenews360
Quick Share

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 கோடியை தாண்டியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 கோடியை தாண்டியது.

உலகம் முழுவதும் 18,03,44,764 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 16,50,70,565 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 39 லட்சத்து 6 ஆயிரத்து 774 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்புடன் தற்போது 11,367,425 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், துருக்கி ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களில் உள்ளன. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச பாதிப்பு மற்றும் உயிரிழப்பு பிரேசில் நாட்டில் பதிவாகியுள்ளது. அங்கு புதிதாக 1,14,139 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,343 பேர் உயிரிழந்துள்ளனர்.

Views: - 319

0

0