கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 13- லட்சத்து 86–ஆயிரத்தை தாண்டியது..!!!
22 November 2020, 7:37 amகொரோனா வைரஸ் பாதிப்பால் உலகளவில் பலியானோர் எண்ணிக்கை லட்சத்தை தாண்டியுள்ளது. அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாளுக்கு நாள் உயிர்ப்பலிகளை அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் வல்லரசு நாடுகளையே நடுங்க வைத்துள்ளது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஆட்டம் காட்டி வரும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டோர் அனைவரிடத்திலும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
பல நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டும், பல நாடுகளும் தங்களது எல்லைகளை மூடியும் உள்ளன, பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள் செயல்படாமல் முடங்கின.
இந்த கொரோனாவிற்கு தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,386,334 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 58,487,741 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 40,464,370 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 102,396 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த வைரஸ் பரவத் தொடங்கியது முதல் விடியும் ஒவ்வொரு நாளிலும் பலி எண்ணிக்கை அதிகரித்தே வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது
0
0