கொரோனா வைரஸ்: கண்ணுக்கு தெரியாத எதிரி… அமெரிக்கா தொடர்ந்து முன்னிலை..!!
20 September 2020, 8:30 am#சீனா: சீனாவில் உள்ள பெரிய நகரங்களில் ஒன்றாக இருக்கும் உவான் நகரத்தில், சுமார் 90 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சீனாவை உலுக்கி வரும் கொரோனா வைரஸ், இந்த நகரில்தான் ஆரம்பமானது. பின்னர், நாளுக்குநாள் தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவி வருகிறது.
அதோடு, மற்ற நாடுகளுக்கும் பரவி உலகளவிலான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது இந்த கொரோனா வைரஸ். எனவே, இதனிடையே, அடுத்தடுத்து உயிர்களை காவு வாங்கி வரும் இந்த வைரஸ் காய்ச்சலை ஒழிக்க சீனா அரசு போர்க்கால நடவடிக்கையை எடுத்தது. அதேவேளையில், இந்தியா உள்பட பிறநாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் சீனாவில் #கொரோனா வைரசிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4,634 உள்ளது. தற்போது சீனாவில் குறைய தொடங்கி உள்ளது.
இந்நிலையில், சீனாவை தொடர்ந்து இந்த வைரஸ் #அமெரிக்காவில் பரவி வருகிறது. அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 203,824 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,967,403 ஆக அதிகரித்துள்ளது. 4,223,693 பேர் குணமடைந்தனர்.
வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.