13 கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா பாதிப்பு: அமெரிக்காவில் மேலும் ஒரு அதிர்ச்சி!

By: Udayaraman
13 September 2021, 10:16 pm
Quick Share

அமெரிக்காவில் உள்ள உயிரியல் பூங்காவில், 13 குரங்குகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸ் தாக்கம், தற்போதும் குறைந்தபாடில்லை. மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் சிங்கம், குரங்கு என விலங்குகளுக்கும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா மிருகக் காட்சி சாலையில் உள்ள கொரில்லா குரங்குகளுக்கும் தற்போது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட கொரில்லா குரங்குகளுக்கு லேசான இருமல் மற்றும் மூக்கு ஒழுகுவது போன்ற சில அறிகுறிகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுவரை 13 கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து மற்ற கொரில்லா குரங்குகளுக்கும் கொரோனா பரிசோதனை எடுக்க பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மனிதர்களிடம் இருந்து கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா தொற்று பரவியதா என்பதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பூங்காவை சுத்தப்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றன.

Views: - 193

0

0