ரஷ்யாவில் கொரோனாவால் அதிகரிக்கும் உயிரிழப்பு: வைரசால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் 6வது இடம்..!!

Author: Aarthi Sivakumar
27 June 2021, 11:09 am
Quick Share

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: ரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பின்லாந்து நாட்டைச் சேர்ந்த ரசிகர்கள் பலருக்கு கால்பந்து போட்டிக்கு கலந்துகொள்ள இந்த நகருக்கு வந்திருந்தபோது வைரஸ் தாக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மிகவும் ஆபத்தான டெல்டா ரக வைரஸ் பரவல் அதிகரித்ததை அடுத்து ஜூன் மாத நடுவில் ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்தது.

இன்று மட்டும் 21 ஆயிரத்து 665 பேர் புதிதாக கொரோனா வைரஸ் நோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். விளாடிமிர் புடின் அரசு கடந்த ஆண்டுமுதல் கொரோனா தாக்கம் குறைந்த பின்னர் பொருளாதார முன்னேற்றம் கருதி பலகட்ட போராட்டங்களை நீக்கிவிட்டது.

இதுவரை ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 653 ரஷ்ய குடிமக்கள் வைரஸ் தாக்கத்திற்கு பலியாகியுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரஸ் படுமோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் ரஷ்யா ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது.

Views: - 305

0

0