கொரோனா தினசரி பாதிப்பில் இந்தியா முதலிடம்.. பிரேசிலில் பலி எண்ணிக்கை கிடுகிடு !

4 April 2021, 7:28 am
Quick Share

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகளவில் பலியானோர் எண்ணிக்கை லட்சத்தை தாண்டியுள்ளது. அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாளுக்கு நாள் உயிர்ப்பலிகளை அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் வல்லரசு நாடுகளையே நடுங்க வைத்துள்ளது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஆட்டம் காட்டி வரும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டோர் அனைவரிடத்திலும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

பல நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டும், பல நாடுகளும் தங்களது எல்லைகளை மூடியும் உள்ளன, பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள் செயல்படாமல் முடங்கின.

இந்த கொரோனாவிற்கு தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28.58 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 2,858,231 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 131,327,725 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 105,717,296 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 97,373 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அமெரிக்காவில் 65,200 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மேலும் 955 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,382,172 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொடர்ந்து விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 92,998 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 514 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 12,484,127 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரேசிலில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 41,218 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று உலகிலேயே அதிகபட்சமாக பிரேசலில் 1931 பேர் பலியாகி உள்ளனர்.

இந்த வைரஸ் பரவத் தொடங்கியது முதல் விடியும் ஒவ்வொரு நாளிலும் பலி எண்ணிக்கை அதிகரித்தே வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Views: - 0

0

0

Leave a Reply