கொரோனா வைரஸ் பாதிப்பு : தொடர்ந்து அமெரிக்கா முதலிடம்!!

Author: Aarthi
4 October 2020, 7:18 am
Corona Cbe - Updatenews360
Quick Share

உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.51 கோடியக உயர்ந்துள்ளது.

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன்முதலாக கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி தனது கோர தாண்டவத்தை காட்டி வருகிறது.

கொரோனா தொற்று வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்துகள் இன்னும் பொது பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால், வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது உலகின் முன்னணி நாடுகளுக்கே பெரும் சவாலாக உள்ளது.

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 35,122,281 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,117,24 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 10 லட்சத்து 37 ஆயிரத்து 524 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,600,846 ஆக உள்ளது. 2வது இடத்தில் பிரேசிலும், 3வது இடத்தில் ரஷியாவும் உள்ளது.

Views: - 63

0

0