கொரோனா வைரஸ்: ஒரே நாளில் 743- பேர் பலி..! அச்சத்தில் மக்கள்..!

25 March 2020, 7:27 am
Quick Share

#சீனா: சீனாவில் உள்ள பெரிய நகரங்களில் ஒன்றாக இருக்கும் உவான் நகரத்தில், சுமார் 90 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சீனாவை உலுக்கி வரும் கொரோனா வைரஸ், இந்த நகரில்தான் ஆரம்பமானது. பின்னர், நாளுக்குநாள் தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவி வருகிறது.

அதோடு, மற்ற நாடுகளுக்கும் பரவி உலகளவிலான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது இந்த கொரோனா வைரஸ். எனவே, இதனிடையே, அடுத்தடுத்து உயிர்களை காவு வாங்கி வரும் இந்த வைரஸ் காய்ச்சலை ஒழிக்க சீனா அரசு போர்க்கால நடவடிக்கையை எடுத்து வருகிறது. அதேவேளையில், இந்தியா உள்பட பிறநாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் சீனாவில் #கொரோனா வைரசிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3,277 -ஐ தொட்டுள்ளது. இந்த வைரஸ் பரவத் தொடங்கியது முதல் விடியும் ஒவ்வொரு நாளிலும் பலி எண்ணிக்கை அதிகரித்தே வருவது சீன மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுதவிர கொரோனா வைரஸ் தாக்குதல் சுமார் 81,171 பேருக்கு உறுதியாகி உள்ளது. அவர்கள் அனைவரும் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 73,159 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

சீனாவை தொடர்ந்து இந்த வைரஸ் இத்தாலியில் பரவி வருகிறது. #இத்தாலியில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 6,820 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 743 – பேர் பலி. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 69,176 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Country,
Other
Total
Cases
New
Cases
Total
Deaths
New
Deaths
Total
Recovered
Active
Cases
Serious,
Critical
Tot Cases/
1M pop
Tot Deaths/
1M pop
China81,1713,27773,1594,7351,573562
Italy69,176+5,2496,820+7438,32654,0303,3931,144113
USA54,808+11,074775+22237853,6551,1751662
Spain42,058+6,9222,991+6803,79435,2732,63690064
Germany32,991+3,935159+363,29029,542233942
Iran24,811+1,7621,934+1228,91313,96429523
France22,304+2,4481,100+2403,28117,9232,51634217