தினசரி கொரோனா பாதிப்பு: பிரேசிலில் மீண்டும் அதிகரிக்கும் தொற்று..!!

Author: Aarthi Sivakumar
2 July 2021, 9:20 am
brazil corona - updatenews360
Quick Share

பிரேசிலியா: உலக அளவில் கொரோனா மொத்த பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளின் வரிசையில் பிரேசில் 3ம் இடத்தில் உள்ளது.

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை உலுக்கி வருகிறது. தொற்று பாதிப்பு பரவி ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்டாலும் கூட தொற்றின் வீரியம் குறைந்தபாடில்லை.

கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து பல அலைகளாக தாக்கத்தொடங்கியுள்ளது. இதனால், உலக நாடுகள் விழி பிதுங்கி நிற்கின்றன. தற்போதைக்கு தடுப்பூசியால் மட்டுமே கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறிவருவதால் தடுப்பூசி போடும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், உலக அளவில் தினசரி கொரோனா பாதிப்பில் பிரேசில் மீண்டும் முதலிடத்திற்கு வந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அந்நாட்டில் 63,140 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக 1,943 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தப்பட்டியலில் இந்தியா 2ம் இடம் வகிக்கிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட்டு வரும் வோர்ல்டோ மீட்டர்ஸ் தரவுகளின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,360 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Views: - 413

0

0