அப்போ 2.. இப்போ 10 : ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்று சாதனை படைத்த தம்பதி!!

9 June 2021, 11:25 am
10 Babies - Updatenews360
Quick Share

தென்னாபிரிக்கா : ஒரே பிரசவத்தல் 10 குழந்தைகளை பெற்றெடுத்த தம்பதியினர் உலக சாதனை படைத்துள்ளனர்.

Teboho Tsotetsi மற்றும் Gosiame Sithole என்ற தம்பதியினருக்கு ஏற்கனவே ஆறு வயதில் இரட்டை குழந்தைகள் உள்ள நிலையில், Sithole (வயது 37) மீண்டும் கர்ப்பமாக இருந்த நிலையில், கடந்த 7-ம் தேதி இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இவர் பிரிட்டோரியாவில் அமைந்திருக்கும் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடைபெற்றது. இதில் 7 ஆண் குழந்தைகள் மற்றும் 3 பெண் குழந்தைகள் என மொத்தம் பத்து குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

Mexico woman pregnant with nine babies | The World from PRX

மேலும், இவரது பிரசவ காலத்தில் இவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவருக்கு எட்டு குழந்தைகள் வரை பிறக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தனர். ஆனால் தற்போது 10 குழந்தைகள் பிறந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்று உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் மாலி நாட்டை சேர்ந்த ஹலிமா சிசி என்ற 25 வயது பெண் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

Views: - 245

1

0