ஒரு சொட்டு பீர் கூட சிந்தாமல் ஒற்றைக்கையால் அற்புத கேட்ச்! வைரல் வீடியோ

2 February 2021, 8:50 am
Quick Share

கிரிக்கெட் ரசிகர் ஒருவர், ஒரு கையில் பீர் வைத்திருந்த போது, கேலரியில் சிக்ஸருக்கு வந்த பந்தை ஒற்றை கையால் அற்புதமாக கேட்ச் பிடித்தார். அப்போது அவர் கையில் வைத்திருந்த கிளாஸில் இருந்த பீரில் ஒரு சொட்டு கூட சிந்தவில்லை. ரசிகரின் இந்த ஒற்றை கேட்ச், அவரை உலக பிரபலம் ஆக்கி விட்டது.

ஆஸ்திரேலியாவில் பிக் பாஸ் லீக் ‘டுவென்டி 20’ கிரிக்கெட் தொடர் நடந்த வருகிறது. இதில் நடந்த லீக் போட்டி ஒன்றில், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி வீரர் ஆஷ்டன் டர்னர் அடித்த பந்து பவுண்டரி லைனை தாண்டி சிக்ஸருக்கு பறந்தது. அதனை அங்கு பீர் குடித்தபடி, போட்டியை ரசித்து கொண்டிருந்தவரை நோக்கி சென்றது.

இதனை அந்த ரசிகர் அற்புதமாக கேட்ச் பிடித்தார். ஒற்றை கையால் அவர் பிடித்த கேட்சை பிக் ஸ்கிரீனில் அனைவரும் பார்த்து ரசித்தனர். ரிப்ளேயில் தான், அவரது மற்றொரு கையில், பீர் இருந்தது. அதிலிருந்து ஒரு சொட்டு கூட கீழே விழவில்லை. இதனை தொடர்ந்து அவர் பிடித்த கேட்ச் பலமுறை பிக் ஸ்கிரீனில் ரிப்ளேயாக ஒளிபரப்பானது. அந்த வீடியோ கிளிப் சமூக வலைதளங்களிலும் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

பிக் பாஷ் லீக்கின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கமும் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. ‘ஓல்டு மேட்டில் நடந்த போட்டியில் என்னவொரு அற்புத கேட்ச்! உலகை பற்றிய எந்த கவலையும் இல்லாமல், சுலபமாக ஒற்றை கையால் பிடித்திருக்கிறார்’ என்ற பதிவுடன் வீடியோவை பகிர்ந்துள்ளது.

மேட்ச் முடிந்த பின், சேனல் 7 அவருடன் ஒரு நேர்காணல் நடத்தியது. தன்னை டாம் என அறிமுகப்படுத்தி கொண்ட அந்த நபர் பேசுகையில், ‘எனக்கு கிரிக்கெட் விளையாட தெரியும். ஆனால் என்னைவிட என் அப்பா நன்றாக விளையாடுவார். நான் கிரிக்கெட் பார்த்துக் கொண்டே சில பியர்களை குடிக்க மட்டுமே வந்தேன். பந்து என்னை நோக்கி வந்த போது அதனை ஒற்றை கையால் கேட்ச் பிடித்தேன்’ என்றார்.

Views: - 0

0

0