தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி..! முதலாளித்துவ பொருளாதாரத்திற்கு திரும்பும் பிடெல் காஸ்ட்ரோவின் கியூபா..!

7 February 2021, 1:50 pm
Cuba_UpdateNews360
Quick Share

1959’ஆம் ஆண்டின் புகழ்பெற்ற புரட்சிக்குப் பின்னர் ஒரு சோசலிச அரசாக மாறியதிலிருந்து, கியூப அரசாங்கம் நாட்டின் பெரும்பாலான தொழில்கள் மற்றும் வணிகங்களை சொந்தமாகக் கொண்டு கட்டுப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கொரோனா மற்றும் அமெரிக்க பொருளாதாரத் தடைகளால் கடந்த ஆண்டு 11% அளவு வீழ்ச்சியடைந்த நிலையில், கியூபாவின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில், பல துறைகளில் அதிகமான தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

தற்போது, கியூபாவில் தனியார் வணிகம் பெரும்பாலும் சுற்றுலாத் துறையில் மட்டுமே உள்ளது. புதிய சீர்திருத்தங்களின் கீழ் தனியார் நிறுவனங்களின் எண்ணிக்கை 127 முதல் 2000’க்கு மேல் உயரும் என்று தொழிலாளர் துறையின் செயலாளர் எலெனா ஃபீடோ இப்போது அறிவித்துள்ளார்.

தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து வளர்வது தான் இந்த சீர்திருத்தத்தின் நோக்கம் என்று ஃபீடோ மேலும் தெரிவித்துள்ளார். எந்தெந்த தொழில்கள் அரச கட்டுப்பாட்டின் கீழ் வராது என்பதை வெளிப்படையாக சொல்லாமல், இது தனியார் துறையின் உற்பத்தி திறனை முழுமையாக பயன்படுத்த உதவும் என்று அவர் வலியுறுத்தினார்.

முதலாளித்துவ வல்லரசான அமெரிக்காவுக்கு மிக அருகில், ஒரு சோஷலிச நாடாக கியூபா இத்தனை ஆண்டுகள் செயல்பட்டு வந்தது பலராலும் ஆச்சரியமாக பார்க்கப்பட்டது.

எனினும் அமெரிக்க பொருளாதார தடைகள் போன்ற பல காரணங்களால் பல உள்ளூர் மக்கள் நாட்டின் பலவீனமான பொருளாதாரத்தில் அடிப்படை பொருட்களைக் கூட வாங்க முடியவில்லை. 

கியூபர்கள் அமெரிக்கத் தடைகளுக்கு பலியானவர்கள் என்று கூறப்படும் நிலையில், தற்போது நாட்டின் பெரும்பாலான துறைகளை தனியாருக்கு திறந்து விடுவதாக கியூபா வெளியிட்டுள்ள அறிவிப்பு, பிடெல் காஸ்ட்ரோவின் சோஷலிச கியூபா, முதலாளித்துவ பொருளாதாரத்தை நோக்கி நகர்வதை உறுதிப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

Views: - 0

0

0

1 thought on “தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி..! முதலாளித்துவ பொருளாதாரத்திற்கு திரும்பும் பிடெல் காஸ்ட்ரோவின் கியூபா..!

Comments are closed.