‘ப்ரொபோஸ்னா இப்டி இருக்கணும்’: சினிமாவை ஓரங்கட்டிய ஜம்போ..வைரலாகும் க்யூட் வீடியோ!!

Author: Aarthi Sivakumar
22 November 2021, 1:28 pm
Quick Share

யானை ஒன்று தனது காதலிக்கு ரொம்ப க்யூட்டாக மலர்கொத்து கொடுத்து ப்ரொபோஸ் செய்து டான்ஸ் ஆடிய வீடியோ இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

சமூக வலைதளங்களில் தற்போது யானையின் ப்ரொபோஸ் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் யானை ஒன்று தனது காதலிக்கு பூங்கொத்து கொடுத்து சினிமாவை மிஞ்சும் அளவுக்கு ப்ரொபோஸ் செய்யும் காட்சி வெளியாகியுள்ளது.

யானை தனது காதலிக்காக தும்பிக்கையில் பூங்கொத்து எடுத்துச் சென்று கொடுக்கின்றது. உடனே அதனை பெண் யானை ஏற்றுக் கொண்டுள்ளது.

பெண் யானை ஏற்றுக்கொண்டதால், அந்த ஆண் யானை தும்பிக்கையை உயர்த்தி சந்தோஷத்தில் நடனமாடும் காட்சி வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இதனை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Views: - 281

0

0