நியூசி. எரிமலை விபத்து…! பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்வு

15 December 2019, 11:22 pm
Quick Share

வெலிங்டன்: நியூசிலாந்தில் எரிமலை வெடிப்பில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

அந்நாட்டில் உள்ள வெள்ளை தீவில் கடந்த வாரம் உள்ள எரிமலைகள் வெடித்து சிதறின. அப்போது அங்கு வந்த சுற்றுலா பயணிகள் அதில் சிக்கிக் கொண்டனர்.

5 பேர் உயிரிழக்க மற்ற அனைவரும் பாதுகாப்புடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிலர் உயிரிழந்தனர். இதையடுத்து பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்து இருக்கிறது. எரிமலை வெடித்த போது பலர் காணாமல் போயினர்.

அவர்களை தேடும் பணி நீடித்து வருகிறது. ஒரு வாரம் கடந்ததால் அவர்கள் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று தேடுதல் குழுவினர் கூறி உள்ளனர். எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று தெரிகிறது.