பதிவானது உலகின் முதல் ஒமிக்ரான் உயிரிழப்பு: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தகவல்…அதிர்ச்சியில் உலக நாடுகள்..!!

Author: Aarthi Sivakumar
13 December 2021, 6:26 pm
Quick Share

பிரிட்டன்: உலகிலேயே முதல்முறையாக இங்கிலாந்தில் ஒமிக்ரான் வைரஸ் தொற்றுக்கு முதல் உயிரிழப்பு பதிவாகியிருப்பதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் தகவல் தெரிவித்துள்ளார்.

சீனாவிலிருந்து பரவ தொடங்கிய கொரோனா தொற்று கடந்த 2020ம் ஆண்டு முதல் உலகை ஆட்டிபடைத்து வருகிறது. உலகம் முழுவதும் பலர் தொற்றால் உயிரிழந்தனர்.

உயிரிழப்பையும், தொற்று பரவலையும் தடுப்பதற்கு உலகின் அனைத்து நாடுகளும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தின. முதல் அலையில் ஏற்பட்ட பாதிப்பு, 2வது அலையிலும் தொடர்ந்து வருகிறது. பல கட்ட கட்டுப்பாடுகளுக்கு பிறகு இரண்டாம் அலையும் முடிவுக்கு வந்ததால் மனிதர்கள் தங்களது இயல்பு நிலைக்கு திரும்பினர்.

இந்த நிம்மதியை உணர்வதற்குள்ளாக அடுத்த அதிர்ச்சியாக ஒமிக்ரான் என்ற தொற்று தற்போது பரவ ஆரம்பித்துள்ளது. கொரோனா வைரஸின் மாறுபட்ட வடிவமான ஒமிக்ரான் தென் ஆப்பிரிக்கா நாட்டில் முதல்முறையாக கண்டறியப்பட்டது.

வேகமாக பரவும் தன்மையை கொண்ட இந்த ஒமிக்ரானை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவந்தாலும் இந்தியா உள்ளிட்ட 59 நாடுகளில் ஒமிக்ரான் பரவியுள்ளது. இந்தியாவில் இதுவரை ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38ஆக இருக்கிறது. பல நாடுகளில் பரவினாலும் இதுவரை எந்த உயிரிழப்பு ஒமிக்ரானால் நிகழாமல் இருந்தது.

இந்நிலையில், பிரிட்டனில் ஒருவர் தற்போது ஒமிக்ரான் தொற்றால் உயிரிழந்திருக்கிறார். இதனால் மக்கள் அனைவரும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். ஒமிக்ரான் தொர்ரால் ஒருவர் உயிரிழந்ததை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதிப்படுத்தியுள்ளார்.

உலகின் முதல் கொரோனா பாதிப்பு பிரிட்டனில் பதிவாகியிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

Views: - 851

0

0