ஆஸ்திரேலியாவில் கட்டுக்கடங்காமல் பரவும் டெல்டா வகை கொரோனா: ராணுவத்தை களமிறக்க அரசு முடிவு..!!

Author: Aarthi
29 July 2021, 5:42 pm
Quick Share

சிட்னி: ஆஸ்திரேலியாவில் டெல்டா வகை கோவிட் வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பெருந்தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது.

ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன் வெளியிட்டுள்ள செய்தியில், ஆஸ்திரேலியாவில் கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஒன்றரை மாதமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும், கடந்த சில வாரங்களில் இல்லாத அளவுக்கு தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்று அதிகரித்துள்ளது.

டெல்டா வகை கோவிட் வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் ஆகஸ்டு 28ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு விதிகளை மக்கள் கடுமையாகப் பின்பற்ற வேண்டும். கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த ராணுவத்தின் உதவி நாடப்பட்டு உள்ளது. அதேபோல் மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

கோவிட் தொற்றால் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக பொருளாதாரம் மந்தநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை மீட்க மக்களும் தொழில் நிறுவனங்களும் வர்த்தகர்களும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரித்துள்ளார்.

Views: - 365

0

0