‘கப்பல் போகனுமே…அப்போ பாலத்தை இடிச்சுருங்க’: அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸுக்காக இடிக்கப்படும் வரலாற்று பாலம்..நெதர்லாந்து அரசு முடிவு..!!

Author: Rajesh
4 February 2022, 5:47 pm
Quick Share

நெதர்லாந்து: அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் படகு ஒன்று செல்வதற்காக வரலாற்று சிறப்பு வாய்ந்த பாலத்தை இடிக்க நெதர்லாந்து அரசு ஏற்பாடு செய்துள்ளது நிகழ்வு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க பெரும் பணக்காரர்களின் ஒருவருமான, பிரபல அமேசான் நிறுவத்தின் நிறுவனரான ஜெஃப் பெசோஸுக்காக நெதர்லாந்து அரசு செய்யப்போகும் செயல் நெதர்லாந்த மக்களை மட்டுமின்றி உலகையே உற்றுநோக்க வைத்துள்ளது.

Image

சுமார் 1994 ம் ஆண்டு நியூயார்க்கில் இயங்கும் ஒரு நிதி குழுமத்திலிருந்து விலகி நூல்களை இணைய வழி விற்கும் தொழிலில் இறங்கியவர் ஜெஃப் பெசோஸ். அப்போது தான் முதன்முதலில் அமேசான் டாட் காம் என்னும் இணைய அங்காடியை தொடங்கினார். தற்போது உபயோகிக்காதவர்கள் யாரும் இல்லை.

இந்நிலையில், பெசோஸிக்காக சுமார் 430 மில்லியன் யூரோ மதிப்புள்ள பிரமாண்டமான படகு தயாராகி வருகிறது. இந்த படகு கடலுக்கு செல்ல வேண்டும் என்றால் நெதர்லாந்தில் இருக்கும் ரோட்டர்டாமர்ஸ் டி ஹெஃப் என்ற வரலாற்று சிறப்பு வாய்ந்த பாலத்தை கடந்து தான் செல்லவேண்டும். கோனிங்ஷேவன் பாலம் சுமார் 1878 ஆம் ஆண்டு கட்டத் தொடங்கி பாதி முடிந்த தருவாயில், இரண்டாம் உலகப் போரின்போது நாஜிகளால் குண்டுவீசித் தாக்கப்பட்து.

Image

அதன் பின் மீண்டும் மக்கள் சேவைக்காக அந்த பாலம் மீண்டும் கட்டப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க இந்த பாலத்தை தாண்டி தான் அந்த படகு செல்லவேண்டும். ஆனால், அந்த பாலத்தின் உயரம் படகின் உயரத்தை விட சிறியது. அந்த பாலத்தை உடைத்தால் மட்டுமே படகு செல்ல முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

இதனால், மேயர் அலுவலகம் படகு கட்டுமானத்தால் உருவாக்கப்பட்ட பொருளாதார நன்மைகள் மற்றும் வேலைகளை வலியுறுத்தி அந்த பாலத்தை இடிக்க சம்மதம் தெரிவித்துள்ளது. ஆனால், இதற்கு உள்ளூர்வாசிகள் எதிர்ப்புகளை தெரிவித்தனர். இதனையடுத்து, 130அடி உயரமான படகுக்கு செல்ல அதற்கான பாலத்தின் பகுதி மட்டுமே அகற்றப்படும் எனவும், அதற்கு ஆகும் செலவையம், மறுசீரமைக்க ஆகும் செலவையும் அமேசான் நிறுவனர் பெசோஸ் பார்த்துகொள்ளவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image

இந்த பாலத்தை சீரமைக்க சில வாரங்கள் எடுக்கும் என டச்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Views: - 1022

0

0