பர்ஸில் வைத்திருந்த ஆணுறைகள்! மகனுக்கு பெற்றோர் அளித்த அதிர்ச்சி வைத்தியம்

1 March 2021, 11:24 am
Quick Share

துவைக்க அழுக்கு துணியை போட்ட இளைஞர் ஒருவர், பர்ஸில் வைத்திருந்த ஆணுறைகளை எடுக்க மறந்தவிட, அதனை அவரது பெற்றோர் பார்த்து அதிர்ந்து போயிருக்கின்றனர். இதற்கு அவர்கள் கொடுத்த ரியாக்ஷன் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஹர்ஷ் மிட்டல் என்ற இளைஞர் ஒருவர், தனது டுவிட்டர் பக்கத்தில், தனக்கு நேர்ந்த தர்மசங்கடமான நிலை குறித்து எழுதியிருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எனது அழுக்கு துணிகளை அம்மா வாஷிங்மிஷனில் போட்டு துவைத்திருக்கிறார். அதனை காய வைக்கும் போது, என பேன்ட்டில் இருந்த பர்ஸை எடுத்து பார்த்திருக்கிறார். அதனை திறந்து பார்த்த போது, அதில் நான் வைத்திருந்த 3 நிறுவனங்களில் 5 ஆணுறைகளை பார்த்துவிட்டார். இதனால் அவர் அதிர்ச்சியில் உறைந்து போய், என் தந்தையிடமும் கூறிவிட்டார்.

வழக்கம் போல் வீடு திரும்பிய என்னை, என் பெற்றோர் வித்தியாமாக பார்த்தனர். அம்மா என்னிடம் வந்து, துணி துவைக்கும் போது உன் பர்ஸில் இருந்த சிலவற்றை நான் கண்டேன் என கூறினார். மாடியில் அப்பா இருக்கிறார் எனவும் அவரை சென்று சந்திக்கும்படியும் கூறினார். மாட்டிக் கொண்டேமே என விழித்தபடி மேலே சென்ற என்னை அப்பா கடுமையாக திட்டினார். திருமணம் வேண்டாம் என இதற்காக தான் கூறினாயா என கடிந்து கொண்டார்.

மேலும், பர்ஸில் இருந்த ஆணுறைகளை எடுத்து மாடியில் வெயில் தந்தை காய வைத்திருந்தார். என் போன்ற ஒரு நிலைமை யாருக்கும் வரக்கூடாது. இந்த நிகழ்வால் நான் மனம் நொந்து போனேன். இவ்வாறு அவர் வெளிப்படையாக பதிவிட்டிருந்தார். அவரது இந்த டுவிட்டர் பதிவு வைரலாக பரவியது.

Views: - 31

0

0