ஆபத்து காலத்தில் எஜமானரின் உயிரை காப்பாற்றிய நாய் – போலீசாரின் நெகிழ்ச்சி பதிவு

17 April 2021, 2:30 pm
Quick Share

தன் எஜமானருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நேரத்தில் தக்க சமயத்தில் துரிதமாக செயல்பட்டு உயிரை காப்பாற்றிய நாய்க்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

அமெரிக்காவின் கன்சாஸ் சிட்டி போலீஸ், தனது பேஸ்புக் பக்கத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பதிவை வெளியிட்டு இருந்தனர். அதில் அவர்கள் குறிப்பிட்டு உள்ளதாவது, கடந்த ஞாயிறன்று இரவு கன்சாஸ் சிட்டி தீயணைப்புத்துறை மற்றும் அவசர சிகிச்சை குழுவுக்கு இரவு 11 மணி போன்று தொலைபேசி அழைப்பு வந்தது. நாங்களும் போதிய உயிர் பாதுகாப்பு உபகரணங்களுடன் தொலைபேசியில் குறிப்பிடப்பட்ட இடத்திற்கு விரைந்தோம்.

https://www.facebook.com/KCKPolice/posts/10157750376156128

அங்கு ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் கிடந்தார். அவருக்கு தக்கநேரத்தில் உரிய சிகிச்சை அளித்ததை தொடர்ந்து அவரது உயிர் காப்பாற்றப்பட்டது. தொலைபேசியில் தகவல் அளித்தவருக்கு நன்றியை தெரிவித்த நேரத்தில், தாங்கள் நன்றியை, இந்த ஐந்தறிவு ஜீவனுக்கு தான் சொல்ல வேண்டும் என்று நாயை காட்டினர்.

என்ன என்று விசாரித்தபோது, அந்த நாயின் உரிமையாளர், நாயை அழைத்துக்கொண்டு வாக்கிங் வந்து உள்ளார். இந்நிலையில், அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்படவே, துரிதமாக செயல்பட்ட நாய், பக்கத்தில் இருந்த வீட்டிற்கு சென்று, தனது எஜமானருக்கு நேர்ந்த நிலையை, சைகையால் விளக்கி, அவசர உதவியை தொடர்பு கொள்ள நிர்பந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 12 ஆம் தேதி வெளியான இந்த பதிவிற்கு இதுவரை 800க்கும் மேற்பட்டோர் கருத்து தெரிவித்து உள்ளனர். போலீசாரின் பேஸ்புக் பதிவில், பலரும் இந்த நாயின் செயலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Views: - 36

0

0