வெளிநாடு தப்பிச் சென்ற இந்திய வைர வியாபாரி மெகுல் சோக்சி : சிறையில் அடைக்க டொமினிக்கா நீதிமன்றம் உத்தரவு!!

18 June 2021, 1:41 pm
Mehul Sokshi - Updatenews360
Quick Share

வைர வணிகர் மெகுல் சோக்சியை சிறையில் அடைக்க டொமினிக்கா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் உத்தரவாத கடிதம் பெற்று வெளிநாடுகளில் உள்ள இந்திய வங்கிகளிடம் ஆறாயிரம் கோடிக்கு மேல் கடன் வாங்கி தப்பிச் சென்ற மெகுல் சோக்சி டொமினிக்கா போலீசாரிடம் சிக்கினார்.

இந்த நிலையில் விசாரணைக்கு நாடு கடத்த இந்தியா முயன்று வந்த நிலையில் சோக்சி வழக்கில் தன்னையும் சேர்த்து கொள்ளும்படி டொமினிக்கா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்நிலையில் அவரை சிறையில் அடைக்க டொமினிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அவரது உடல்நிலை மோசமாக உள்ளதால் மருத்துவமனையில் இருப்பார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

Views: - 207

0

0