அமெரிக்க தேர்தல் களத்தில் எதிரொலிக்கும் நீதிபதி மரணம்..! மீண்டும் பெண்ணுக்கு வாய்ப்பளிக்க டிரம்ப் முடிவு..!

20 September 2020, 7:37 pm
Trump_Updatenews360
Quick Share

நீதிபதி ரூத் பேடர் கின்ஸ்பெர்க்கின் மரணத்தால் உருவான காலியிடத்தை நிரப்ப ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அமெரிக்க உச்சநீதிமன்றத்திற்கு ஒரு பெண் நீதிபதியை நியமிக்க வாய்ப்புள்ளது.
அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த ரூத் பேடர் கின்ஸ்பெர்க் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் மரணமடைந்தார். 
இவர் அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் பணிபுரிந்த இரண்டாவது பெண் நீதிபதி மற்றும் இந்த பணியில் 27 ஆண்டுகள் இருந்துள்ளார். மேலும் சிறந்த பெண்ணியவாதியாகவும் திகழ்ந்தார்.
அவரின் இறப்பு அமெரிக்க மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மற்றும் இது வரவுள்ள அமெரிக்க தேர்தலிலும் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. 

நேற்று வடக்கு கரோலினாவில் நடந்த தேர்தல் பேரணியில் உரையாற்றிய டிரம்ப், நீதிபதியின் இறப்பால் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடத்திற்கு மீண்டும் ஒரு பெண் நீதிபதியை நியமிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் உள்ள காலியிடங்களை நிரப்புவது தனது உரிமைகளில் ஒன்றாக இருப்பதாக டிரம்ப் கூறினார்.

பேரணியின் போது, ​​பரிந்துரைக்கப்பட்டவர் ஆணாகவோ பெண்ணாகவோ இருக்க வேண்டுமா என்று டிரம்ப் ஆதரவாளர்களிடம் கேட்டார். ஒரு பெண் வேட்பாளருக்காக கூட்டம் சத்தமாக ஆரவாரம் செய்தது.

“நாங்கள் மிக விரைவில் இந்த செயல்முறையைத் மீண்டும் தொடங்கப் போகிறோம் என்று நினைக்கிறேன். நாங்கள் விரைவில் ஒரு வேட்பாளரைப் பெறுவோம்.” என டிரம்ப் கூறினார்.

தேர்தல் நடக்கும் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 29 புதிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிபர் டிரம்ப்பால் நியமனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0