கொரோனா வைரஸ் மருத்துவ ஆலோசகர் ராஜினாமா..! டிரம்ப் நிர்வாகத்தில் அடுத்த பரபரப்பு..!
1 December 2020, 5:35 pmகொரோனா வைரஸ் குறித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சர்ச்சைக்குரிய சிறப்பு ஆலோசகர் டாக்டர் ஸ்காட் அட்லஸ் திடீரென பதவி விலகியுள்ளார்.
தனது நான்கு மாத கால பதவியில், பொது சுகாதாரம் அல்லது தொற்று நோய்களில் முறையான அனுபவம் இல்லாத அட்லஸ், அமெரிக்காவில் 2,68,000’க்கும் அதிகமான மக்களைக் கொன்ற தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முககவசங்கள் மற்றும் பிற நடவடிக்கைகளின் அவசியம் குறித்து கேள்வி எழுப்பினார்.
முககவசங்களின் பயனைப் பற்றி கேள்வி எழுப்பியதோடு, அவர் ஊரடங்கிற்கு எதிராகவும் இருந்தார். மேலும் மந்தை நோய் எதிர்ப்பு சக்தி பற்றிய கருத்தை ஊக்குவித்தார்.
65 வயதான ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக நரம்பியல் நிபுணரான அவர், தனது 130 நாள் தற்காலிக வேலையின் முடிவில் இன்று ராஜினாமா செய்தார் என்று அமெரிக்க ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அட்லஸ் தனது ராஜினாமா கடிதத்தின் புகைப்படத்தை ட்வீட் செய்தார். கடிதத்தில், தனது ஆலோசனை எப்போதும் தொற்றுநோய் மற்றும் கட்டமைப்புக் கொள்கைகள், குறிப்பாக தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகளுக்கு ஏற்படும் அனைத்து பாதிப்புகளையும் குறைப்பதில் கவனம் செலுத்துகிறது என்று கூறினார்.
“இந்த முயற்சிக்கும், இந்த கடினமான காலகட்டத்தில் புதிய அணியை அவர்கள் வழிநடத்துகையில் நான் அவர்களுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடனின் கொரோனா வைரஸ் அணியைக் குறிப்பிட்டு தெரிவித்துள்ளார்.
0
0